கொரோனாவை தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- கொரோனாவை தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.  கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.  

மேலும், பேசிய அவர்  திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.  

ஜூன் 30-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உரிய முடிவெடுக்கப்படும். கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.