சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் பெண்கள் சபரிமலைக்கு வந்தால அவர்களுக்கு பாதுகாப்பு தருவோம் என கேரள அரசு அறிவித்து. நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்டடிருந்தன.

இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அய்யப்பன்கோவில் நடை திறக்கப்பட்டபோது பல பெண்கள் கோவிலுகுள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பற்றம் நிலவியது. அவர்களை உள்ளே நுழையவிடாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண்ணியவாதியும்,  கவிதா என்ற பெண் பத்திரிக்கையாளரும், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறப்பதால் நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூஜையின் போது சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.