Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணிக்கு கல்தா... டி.டி.வி அணிக்கு தாவும் முக்கிய கட்சி..? உடன்பிறப்புகள் அதிர்ச்சி..!

மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாததால் திமுக கூட்டணியிலிருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
From the DMK coalition Humanity Peoples Party Decision
Author
Tamil Nadu, First Published Mar 5, 2019, 12:58 PM IST

மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாததால் திமுக கூட்டணியிலிருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 From the DMK coalition Humanity Peoples Party Decision

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-2, இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 From the DMK coalition Humanity Peoples Party Decision

திமுக கூட்டணியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக தொகுதி ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவதாக திமுக கூறியதால் மனிதநேய மக்கள் கட்சி மாற்று அணியில் இடம் பெற்று போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

From the DMK coalition Humanity Peoples Party Decision

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்து உள்ளது. இன்று மாலை அவசரக் கூட்டம் கூட்டி மாற்று முடிவை எடுக்கவிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக திடீர் அழைப்பு விடுத்து உள்ளது. மதிமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios