Asianet News TamilAsianet News Tamil

மாற்றுத்திறனாளிகளின் அறிய கவனத்திற்கு..!! மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டைகளை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Free travel card for the disabled, Municipal Transport Corporation Action Notice
Author
Chennai, First Published Sep 5, 2020, 11:15 AM IST

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டைகளை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்த ஏதுவாக கட்டணமில்லா பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகவும், ஏற்கனவே பெற்று உள்ளவர்களுக்கு புதுப்பித்தும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட இந்த கட்டணமில்லா பயண அட்டைகளில் காலவரம்பு அல்லது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் படுகிறது. 

Free travel card for the disabled, Municipal Transport Corporation Action Notice

covid-19 நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஆண்டிற்கான 2020 முதல் மார்ச்  2021 வரை புதுப்பிக்கப்பட்டுள்ள 2,056 மாற்றுத்திறனாளி களுக்கான  சலுகை அட்டைகள் சென்னை கேகே நகர், அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வாயிலாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பயண அட்டைகள் யாவும் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏனைய பிற மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச் சலுகை அட்டையானது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு அலுவலகங்கள் மூலமாகவே வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் சலுகை அட்டையை புதுப்பிக்கும் பொருட்டு தொடர்புடைய மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களுக்குச் சென்று உரிய விண்ணப்பம் பெற்று, 

Free travel card for the disabled, Municipal Transport Corporation Action Notice

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (மறுவாழ்வு அலுவலர் சான்றிதழோடு) மீண்டும் மாநகர போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்திற்கு வந்து உரிய சலுகைகளைப் பெறுவதில் உள்ள நடைமுறைகளில் எளிமைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் தலைமையகம் ஓரிரு முறை வந்துசெல்லும் அலைச்சலை தவிர்த்து விண்ணப்பம் பெறுகின்ற அலுவலகங்களிலேயே இந்த பயண அட்டைகளை உடனுக்குடன் வழங்கிட மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இந்த ஆண்டுக்கான 2020-2021 கட்டணமில்லா தொலைபேசி அட்டைகளை தொடர்புடைய அந்தந்த மண்டல மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் promtc123@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும்  044-234 55 801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

Follow Us:
Download App:
  • android
  • ios