மேற்கு வங்கத்தில் அடுத்த ஒரு வருடத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மம்தாபானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது முக்கிய அம்சமாக, ஏழை, எளிய மக்களுக்கு மேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தியாவிற்கு நான்குபக்கமும் சோதனைகள் சுற்றி வளைத்து அடித்து வருகிறது. ஒருபக்கம் சீனா இந்திய எல்லையில் தாக்குதல் இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல் நேபாளமும் சேர்ந்து சதி செய்கிறது. எனவே இந்தியா பல்வேறு சிக்கல்களை சோதனையை சந்தித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு ஜூலைமாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

  மேற்கு வங்க மாநிலத்தில் ஏழை, எளியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருள்கள், 2021ம் ஆண்டு ஜூன் வரை தொடர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபயிற்சி செல்லலாம், திருமண விழாவில் 50 பேரும், இறுதி சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளலாம்.130கோடி மக்களுக்கும் இலவசமாக ரேக்ஷன் பொருள்கள் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.நாட்டில் 80கோடி மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் இறுதி வரை பிரதமர் நீடித்துள்ளார்.