கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் அமைப்பட்டுள்ள அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரால் தொடங்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் இலவச பயிற்சி மையத்தில், முதல்நிலை தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார். 

3 ஆண்டு கால கடுமையான முயற்சியால் தற்போது இந்த அகடாமி திறக்கப்பட்டுள்ளது. முக்கியமான படிப்பான யு.பி.எஸ்.சி.யை எழை, எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களது கனவை நினைவாக்கும் வகையில் இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் தெரிவித்தார். யு.பி.எஸ்சி முதல் நிலை நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமேஇலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆண்டிற்கு சுமார் 500 மாணவ, மாணவிகளுக்கு இந்த மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.