Asianet News TamilAsianet News Tamil

இலவச சிலிண்டர், ரூ.2000... பெண்களுக்கு ரூ.10 லட்சம்... 3 மாதங்களுக்கு கவலையில்லை... வாரி வழங்கும் மத்திய அரசு!

இலவச சிலிண்டர், ரூ.2000, அரிசி, பருப்பு என ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

Free Cylinder Rs.2000 .. Rs.10 Lakhs for Women ... Don't worry for 3 months
Author
India, First Published Mar 26, 2020, 2:45 PM IST

இலவச சிலிண்டர், ரூ.2000, அரிசி, பருப்பு என ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர்ர் ஆகியோர்  செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர். ‘’ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 36 மணி நேரத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். 
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

 Free Cylinder Rs.2000 .. Rs.10 Lakhs for Women ... Don't worry for 3 months

விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 இரண்டு தவணைகளில் வழங்கப்படும். விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 5 கோடி பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Free Cylinder Rs.2000 .. Rs.10 Lakhs for Women ... Don't worry for 3 months

 மருத்துவர்கள், நர்ஸ் போன்ற மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பி செய்யப்படும். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த மூன்று மாதத்திற்கு தலா ஒரு கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்.  சுய உதவிக் குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். தொழிலாளர்கள் பிஎஃப் படத்தில் 75 சதவீதம் அல்லது மூன்று மாத ஊதியம் இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம். 100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில், ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டம் பயனளிக்கும்.

யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 80 கோடி மக்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும். சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வீதம் முதல் கட்டமாக அவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். 1.70 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Free Cylinder Rs.2000 .. Rs.10 Lakhs for Women ... Don't worry for 3 months

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 வழங்கப்படும் .விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும்  .மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு  செய்யப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். 

இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படுகிறது என அவர்கள் கூறினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios