கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதனையடுத்து, நிகழ்ச்சியின்போது முதல்வர் பேசுகையில்;- கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், புதுக்கோட்டையில் அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் முதலீடு குறித்து பொய்யான செய்தியை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். 813 விவசாயிகளுக்கு  வேளாண் உபகரணங்களுக்கு சுமார் 8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.