Asianet News TamilAsianet News Tamil

கோட்டை முதல் ஜெயில் வரை ஊழல்..! புதுகட்சி தலைவர் கமல்ஹாசன் காட்டம்!

கோட்டை முதல் புழல் ஜெயில் வரை ஊழல் பரவியுள்ளது என என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். கோவை இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Fort to Jail in Corruption...Kamal Hassan
Author
Tamil Nadu, First Published Sep 20, 2018, 11:58 AM IST

கோட்டை முதல் புழல் ஜெயில் வரை ஊழல் பரவியுள்ளது என என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். கோவை இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. Fort to Jail in Corruption...Kamal Hassan

நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், செய்தளிளர்களிடம் கூறியதாவது. இது பொறுப்பாளர்களுக்கு மட்டுமே ஆன பயிலரங்கம். தங்களை விமர்சித்து கொள்ளவும், அவர்ள் கற்றுக் கொள்ளவும் உள்ள ஒரு பயிலரங்கம். பல வல்லுநர்கள், வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அறிவுரைகளை கூறினார்கள்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்த பயிலரங்கில் பேசப்பட்டது. தேர்தல் எதிர்கொள்ளும் முறை குறித்து கூறினர். தனித்து போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலையும், விற்கப்படும் விலையும், அதிக லாபத்துக்கு விற்கப்படும் வியாபாரமாகத்தான் தோன்றுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும். மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. ஒவ்வொரு கட்சியும் மாறுபட்ட கருத்து பேசலாம். ஆனால், என் கருத்துக்கு மாறுபட்ட கருத்து, இருக்கக் கூடாது என பாஜகவினர் நினைக்கிறார்கள். இந்த ஜனநாயக நாட்டில் ஒத்துவராத விஷயம். என்னுடைய கருத்தை பகிரங்கமாக கூறுவேன். Fort to Jail in Corruption...Kamal Hassan

இடைத்தேர்தலை பார்வையிடுவோம். ஆனால், கலந்து கொள்ள மாட்டோம். உன்னிப்பாக கவனிப்போம். விமர்சிப்போம். நல்லதை மக்களுக்கு புகட்ட முயற்சிப்போம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களை செய்து வருகி றோம். உள்ளாட்சி தேர்தலில் தலையிடக் கூடாது என நினைக்கிறோம். இருக்கும் குழப்பத்தில் இன்னும் ஒன்று வேண்டாம். நாங்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நினைக்கிறோம். Fort to Jail in Corruption...Kamal Hassan

7 பேர் விடுதலை, சட்ட விவகாரம். இவ்வளவு நாள் இருந்து விட்டு, இப்போது அவசரப்படுத்த கூடாது. எது நியாயமோ, அதை கவர்னர் செய்யட்டும். யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் விமர்சிக்கக்கூடாது. அதிமுகவினர், சப்பாணி என படத்தின் கேரக்டரை சொல்லி, நம்மை பேசும்போது, அதற்கு பதிலாக நாம் ஏதாவது சொன்னால், அவர்கள் வருத்தப்படுவார்கள். மக்கள் நீதி மையம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டது. மாற்றம், மாற்றம் என்று பேசிக் கொண்டிருக்காமல், மாற்றமாக செயல்பட்டு வருகிறோம். தலைமை செயலகத்திலிருந்து சிறை வரை பரவியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios