Asianet News TamilAsianet News Tamil

மீனவர்கள் சடலமாக மீட்பு.? நெடுந்தீவு கடற்பரப்பில் நடந்தது என்ன.? இலங்கை கடற்படை வெறி ஆட்டம்.

படகு சேதமடைந்துள்ளதால் நீண்டதூரம் செல்லமுடியாமல் படகு மூழ்கும் அபாயத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 

Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.
Author
Chennai, First Published Jan 21, 2021, 11:30 AM IST

இலங்கை  நெடுந்தீவு  கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மீனவ கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (18.01.2021) 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் 1. மெசியா (30), த/பெ  அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், 2. நாகராஜ் (52), த/பெ  வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சிப்புளி, 3. சாம் (28), த/பெ  நேச பெருமாள், மண்டபம், 4. செந்தில்குமார் (32), த/பெ  செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம்ஆகிய நான்கு மீனவர்கள் சென்றனர். 

Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.

பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நெடுத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு 2 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர். மீனவர்படகுமீது முட்டி மோதியதில் படகு சேதமடைந்து மூழ்கத் தொடங்கியது.அதிலிருந்த மீனவர்கள் அலறிய சத்தம் மற்றொரு படகில் இருந்த மீனவர்களுக்கு சேட்லைட் போனில் கேட்டது. சிறிது நேரத்தில் எந்த சத்தமும் வரவில்லை, என சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் அந்த மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 

Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.

19.01.21 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், கரைக்கு வந்து சேரவில்லை. அந்த விசைப்படகைத்தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றும், அவர்களை கண்டுபிடிக்கமுடியாத நிலையில். அவர்கள்  குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது . இதனால் மீனவர் குடும்பங்கள் வேதனையில் தவித்து வந்தனர். இந்நிலையில், இலங்கை நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய படகில் இருந்த மீனவர் இருவரின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.  அச்சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த தகவல் கடற்படையினரால் காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகிலிருந்த மீனவர்களுடைய சடலமே அவை என கடற்படையினர் யூகித்துள்ளனர்.

  Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.

ஆனால் முன்னதாக இதுகுறித்து தெரிவித்த இலங்கைக்கற்படையினர்,  மீனவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்றும், எல்லைதாண்டி மீன்பிடித்த அந்தப்பபடகை  நாங்கள் பிடிக்க முற்பட்டபோது எங்களிடம் பிடிபடாமல் அந்தப்படகு தப்பிச்செல்லுகையில் எங்கள் இரு கப்பல்களில் மீது மோதி சேதப்படுத்திவிட்டு இந்திய கடற்பகுதிக்குள் விரைந்து சென்றுவிட்டன எனவும்,  படகு சேதமடைந்துள்ளதால் நீண்டதூரம் செல்லமுடியாமல் படகு மூழ்கும் அபாயத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios