முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

66 வயதான அருண் ஜேட்லி சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டன. 

எனினும் அருண் ஜேட்லிக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், வியாழனன்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சிகிச்சை பலனின்றி சற்று நேரர்த்திற்கு முன்  அவர் உயிரிழந்தார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார் அருண் ஜேட்லி. அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் வெளிநாட்டிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று மிக மோசமான நிலையை அடைந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12. 7 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.