Former MP from Dinakaran former MP appealed to the Election Commission to make any decision not to announce their decision regarding the double leaf symbol Anilakalan has gone to Delhi.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து நாங்களே உண்மையான அதிமுக என்று இரு தரப்பும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இதைதொடர்ந்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு அணியும் ஒரு அணியாக ஒன்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அதில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சசிகலா தினகரனுக்கு எதிராக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது இரட்டை இலையையும் கட்சியையும் மீட்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பிரமாண பத்திரங்களை திரும்ப வாங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து டிடிவி தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி அன்பழகன் ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர். அங்கு இரட்டை இலை சின்னம் தொடர்பாக எங்களை கேட்காமல் எந்த முடிவும் அறிவிக்க கூடாது என முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
