பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கட்சியின் பெயரில் வசூலிக்கும் நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருவதாக, அக்கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி பாமக தலைவர் ஜி.கே மணி, மாநில துணைப்பொதுச்செயலாளராகவும், ஓமலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசுவை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஜிகே.மணிக்கும் தமிழரசுக்கும் ஏகாப்பொருத்தமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், பா.ம.கவில் இருந்து வெளியேறிய அவர் ஓமலூரில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய தமிழரசு, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணியால் பாமக கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருவதாகவும், கட்சியின் பெயரில் வசூலிக்கும் நிதியை சொந்த செலவுக்கு ஜி.கே.மணி பயன்படுத்துவதாகவும், குற்றம் சாட்டினார்.