அமமுகவின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் K.கதிர்காமுவின் மகன் மறைவுக்கு டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அமமுகவின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் K.கதிர்காமுவின் மகன் மறைவுக்கு டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- கழகத்தின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சோதனையான காலகட்டத்தில் நமது இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தவருமான அன்பு சகோதரர் டாக்டர் K.கதிர்காமு அவர்களின் மகன் டாக்டர் K.அருண்குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

உறுதுணையாக இருந்த மகனை இழந்துவாடும் டாக்டர் K.கதிர்காமு அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Scroll to load tweet…

இந்த பெரும்துயரத்தை தாங்கும் சக்தியை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கிட இறையருளை பிரார்த்திக்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.