கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.! அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கலாய்த்த சபாநாயகர்-என்ன காரணம் தெரியுமா?

மதுரையில் கல்லூரி அமைத்து தர முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என  அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வரவில்லையென் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்

Former minister Sellur Raju requested in the assembly to set up a government college in Madurai

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

சட்டப்பேரவையில் இன்று காலை கேள்வி பதில் நேரத்தில் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் உயர் கல்வி தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அவர் அப்போது அவையில் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்தபடியாக செல்லூர் ராஜு கேள்வி எழுப்ப மைக்கை எடுத்த நிலையில் முன்னதாக கேள்வி எழுப்பி இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் திடீரென பேரவைக்குள் வந்தார்.

இதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் தனது தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். பேரவைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வர கால தாமதமானதை அடுத்து அவருக்கு அடுத்ததாக செல்லூர் ராஜு மைக்கில் பேச இருந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன் பேரவைக்குள் வந்து கேள்வி கேட்டார். இதனை கண்ட சபாநாயகர் செல்லூர் ராஜூக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என கலாய்த்தார்.

Former minister Sellur Raju requested in the assembly to set up a government college in Madurai

மதுரையில் அரசு கல்லூரி

இதனையடுத்து உயர்கல்வித்துறை தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்லூர் ராஜி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், "மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது தான். அதற்குப் பிறகு தொடங்கவில்லை அதுவும் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. மற்ற எல்லாம் தனியார் கல்லூரியாக தான் உள்ளது.

மாநகராட்சி பகுதியில் எந்த கல்லூரியும் இல்லாமல் உள்ளது. என்னுடைய தொகுதியில் 3.5 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடம் காலியாக உள்ளது.  ஏற்கனவே இந்த கேள்வியை முதல்முறையா கேட்டேன்.  அப்போது அமைச்சர் பொன்முடி 10 ஆண்டுகள் நீங்கள் அமைச்சராக இருந்து ஒன்றும் செய்யவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் நிச்சயமாக செய்வார். கல்லூரி கொடுப்பார் நான் வாங்கி கொடுப்பேன் எனப் போன ஆண்டே சொன்னதாக செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். 

Former minister Sellur Raju requested in the assembly to set up a government college in Madurai

உங்க கையில் தான் உள்ளது

தொடர்ந்து பேரவை தலைவர் அப்பாவு பார்த்து நிறைவேற்ற சொல்லுங்க... உங்க கையில தான் இருக்கு என செல்லூர் ராஜூ பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் அதை செய்து கொண்டிருக்கிறார். மதுரையை பொறுத்த வரை உறுப்பு கல்லூரிகள் எல்லாம் அரசு கல்லூரிகளாக ஏற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு உறுப்பு கல்லூரிகள் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்தவரை கல்வியிலே மிகச்சிறப்பாக இருப்பது தான். பல்கலைக்கழகமே அங்கு இருக்கிறது. ஆகவே உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வருங்காலங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பொங்கலுக்கு ராஜஸ்தானில் விடுமுறை இல்லை.! மார்வாடிகள் கொண்டாட்டத்திற்காக தமிழர்கள் இறைச்சி சாப்பிட தடையா-சீமான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios