Asianet News TamilAsianet News Tamil

”உங்கள் பிரமாண பத்திரங்களில் நிறைய பிழைகள் உள்ளது டிடிவி”...! கமெண்ட் போட்ட கே.பி...!

Former minister KP Munusamy said that there are many errors in the reports issued by Dinakaran.
Former minister KP Munusamy said that there are many errors in the reports issued by Dinakaran.
Author
First Published Oct 6, 2017, 6:59 PM IST


எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துரைத்து வாதிடப்பட்டது எனவும், தினகரன் அளித்த பிராமண பத்திரங்களில் நிறைய பிழைகள் உள்ளன எனவும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டது. 

இதனால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது. 

மேலும் இருதரப்பும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் தரவேண்டும் என கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர். 

அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது. 

இதில் எடப்பாடி தரப்பு, ஒபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு என என 2 மணி நேரம் அனல் பறக்க வாதம் நடைபெற்றது. 

இதையடுத்து இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த விசாரணையை வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துரைத்து வாதிடப்பட்டது எனவும், தினகரன் அளித்த பிராமண பத்திரங்களில் நிறைய பிழைகள் உள்ளன எனவும் தெரிவித்தார். 

மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 95% எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் கேபி முனுசாமி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios