முன்னாள் முதல்வரின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை... கதறும் தொண்டர்கள்..!
30 வயதான சவுந்தர்யா அவரது வீட்டில் கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். எடியூரப்பாவின் மூத்த மகள் பார்வதியின் பேத்தி சௌந்தர்யா.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகள் வழிப் பேத்தி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
30 வயதான சவுந்தர்யா அவரது வீட்டில் கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். எடியூரப்பாவின் மூத்த மகள் பார்வதியின் பேத்தி சௌந்தர்யா. பத்மாவதியின் மகளான சவுந்தர்யாவுக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. 30 வயதான சவுந்தர்யா பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மத்திய பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் கல்லூரியில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருவருக்கும் 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இது தற்கொலையா..? அல்லது வேறு காரணமா..? என்பது இன்னும் தெரியவில்லை. தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சௌந்தர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. சௌந்தர்யா உடல் பௌரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.