பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். 

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, 1995-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளராகப் பதவி வகிப்பவர் டாக்டர் சந்தோஷ் பாபு. தமிழகத்தின் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இணைய வசதி அளிக்கும் 'தமிழ்நெட்' திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட `தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் அளிப்பதற்காக, டெண்டர் விதிகளைத் தளர்த்த ஆளும்கட்சியிலிருந்து அழுத்தம் கொடுக்க, தனது ஐ.ஏ.எஸ் பணியில், விருப்ப ஓய்வு பெற்றார். 

இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு  கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இன்று கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி அதிகாரி சந்தோஷ்பாபுவை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.