15 வயது சிறுமியை காம பசிக்கு இரையாக்கிய முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை.!
வீட்டில் வேலை செய்த சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற, திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரைச் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
வீட்டில் வேலை செய்த சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற, திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரைச் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார். 2006-2011வரை திமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போது பெரம்பலூரில் உள்ள இவரது வீட்டில் கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த 15 வயசு சிறுமியை வீட்டு வேலைக்காக வைத்திருந்தார்.
ஒருநாள் அந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் என்று சொல்லி பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். பெற்றோர் வந்து பார்ப்பதற்குள் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கள் மகளது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் வழக்கு தொடர்ந்த நிலையில், பிரேதப்பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து ராஜ்குமார் பல்வேறு வழக்குகளில் அவர் கைதானார். நண்பர்களோடு சேர்ந்து சிறுமியை கற்பழித்தது தெரிய வந்தது. இவரை தவிர அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராஜ்குமார், ஜெய்சங்கர் 2 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 வருடசிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறியும், காவல்துறை தரப்பு குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்றும் நீதிபதி அவர்களை விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.