எல்லோரும் விரும்புவது கூடி வந்தால் கோடி நன்மை என ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை குறித்து அழைப்பு எதுவும் வரவில்லை என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒருமித்த கருத்தோடு அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என வாயிற்கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  எல்லோரும் விரும்புவது பொல் கூடி வந்தால் கோடி நன்மை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டும் என நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர் பேச்சுவார்த்தை குறித்து அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.