கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல்... புதிய கட்சியை தொடங்கினார் பாஜக முன்னாள் அமைச்சர்!!

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 

former bjp minister janardhana reddy  started a new party

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். முன்னதாக கர்நாடகாவில் கடந்த 2008 சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோது அப்போதை முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரைவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் தான் ஜனார்த்தன ரெட்டி. இவர்  மீது கனிம சுரங்க முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையும் படிங்க: IT தொழில்நுட்பம் வேண்டாம் என்ற கேரளா, இன்று IT துறையில் முன்னோடி- பேராசிரியர் இ.பாலகுருசாமி!

இதை அடுத்து அவரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை துவக்கி உள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்யான ராஜ்ய பிரகதி பக்சா எனும் கட்சியை துவங்க உள்ளேன். வரும் தேர்தலில் நான் கொப்பல் மாவட்டம் கங்காவதி சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

இதையும் படிங்க: 1.5 டன் தக்காளிகள்.. சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம் - வைரல் வீடியோ!

வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க உள்ளேன். எனக்கும், பாஜக தலைவர்களும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. எனது நண்பர் ஸ்ரீராமுலு பாஜகவில் அமைச்சராக உள்ளார். நான் புதிய கட்சி தொடங்கினாலும் எங்கள் இருவரின் நட்பும் பாதிக்காது. ஏனென்றால் நாங்கள் சிறுவயது முதலே நண்பராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கி உள்ளது பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios