நாங்கள் வயதானவர்கள் என்றால் எடப்பாடி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் இளைமையானவர்களா.? சேலஞ்சர் துரை அதிரடிகேள்வி

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தனர். இதனை விமர்சித்த அதிமுக நிர்வாகிகள் வயதானவர்களை பாஜக தங்கள் கட்சிக்கு சேர்த்துள்ளதாக கிண்டல் செய்திருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த சேலஞ்சர் துரை நாங்கள் வயாதனவர்கள் என்றால் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன் இளைமையானர்வகளா.? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Former AIADMK MLA Challenger Duraisamy has said that he will work for BJP victory KAK

பாஜகவில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்த அதிமுக- பாஜக கூட்டணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முறிந்தது. இதனையடுத்து இரண்டு தரப்பும் புதிய கூட்டணியை உருவாக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்தநிலையில் அதிமுகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில், அதிமுக மாஜி எம்எல்ஏக்களான கு.வடிவேல் - கரூர்,  P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி, திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான்,  திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர் உள்ளிட்ட 14 பேரை பாஜகவில் இணைத்தது. இதில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.

Former AIADMK MLA Challenger Duraisamy has said that he will work for BJP victory KAK

பாஜகவில் இணைய காத்திரும் அதிமுக நிர்வாகிகள்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுகவினர் வயதானவர்களை பாஜக தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளதாக தெரிவித்தது. இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவில் இணைந்த பிறகு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய பாஜக நிர்வாகி கே.பி.ராமலிக்கம் கூறுகையில், அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும் ,அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். அதேபோல் ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னும் அதிமுக ,திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என தெரிவித்தார். 

Former AIADMK MLA Challenger Duraisamy has said that he will work for BJP victory KAK

நாங்கள் வயதானவர்களா.?

இதனையடுத்து பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை கூறுகையில், இன்னும் அடுத்த பல  ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.தொழில்துறையான கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாஜகவில் இணைந்திருக்கிறோம் என தெரிவித்தார். எங்களை வயதானவர்கள் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அப்படியென்றால், எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் ,பொன்னையன்,திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா.? என கேள்வி எழுப்பினார்.  நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல  தவிழ்ந்து போய் வந்தவர்களா என ஆவேசமாக சேலஞ்சர் துரை கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார்.. பரபரப்பு கிளப்பிய ஆர். எஸ் பாரதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios