Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சோதனை.. அசால்ட்டாக பதில் சொல்லிய தங்கமணி !

பொதுமக்கள் மத்தியில்  எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Former aiadmk minister p thangamani speech after it raid
Author
First Published Jul 20, 2022, 7:53 PM IST

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என வரிசையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. முடிந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Former aiadmk minister p thangamani speech after it raid

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல், குமாரபாளையத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, 4.85கோடி ரூபாய், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. 

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இன்று நடந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டினை நான்கு பக்கவாட்டு சுவர் நீளம்,அகலம் வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட கட்டிட மதிப்பினை அளவீடு செய்தனர். மேலும் திருச்செங்கோடு சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர்  தங்கமணிக்கு சொந்தமான இரண்டு கடைகள் மற்றும் அம்மன் கோவில் வீதியில் உள்ள சாயஆலை அமைந்துள்ள இடத்தினை அளவீடு செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

Former aiadmk minister p thangamani speech after it raid

மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

இதை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 5000 சது ரஅடிக்கு மேலான அசையா சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணிகள் நிறைவுபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ‘60ஆண்டுகள் பழமையான  பூர்வீக சொத்தை அளவீடு செய்யும் பணிகள் மட்டுமே இன்று நடைபெற்றது. 

பொதுமக்கள் மத்தியில்  எனக்கு உள்ள நற்பெயருக்கு  களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு இருக்கிறது. நீதிமன்றம் இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்கு தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் மீண்டும் தருமமே வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக உள்ளது. எதிர்தரப்பு எங்கே சென்றாலும் முடியாது. நியாத்தின் பக்கம் நாங்கள் உள்ளதால் எங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !

Follow Us:
Download App:
  • android
  • ios