20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

It raids more than 20 places Madurai and Dindigul contractors houses and offices

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என வரிசையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட இரண்டு அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. முடிந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

It raids more than 20 places Madurai and Dindigul contractors houses and offices

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல், குமாரபாளையத்தில் உள்ள வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகிறார்கள். மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

It raids more than 20 places Madurai and Dindigul contractors houses and offices

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் உள்ள கிளாட்வே, அன்னை பாரத் சிட்டி, கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சில நிறுவனங்கள் என கடந்த அதிமுக ஆட்சிக்கு நெருக்கமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை முடிவில் பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios