Asianet News TamilAsianet News Tamil

BREAKING ஆட்டத்தை ஆரம்பித்த முதல்வர் எடப்பாடி... முதல்முறையாக சசிகலாவின் சொத்துக்கள் அரசுடைமை..!

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையக்கப்பட்டுள்ளது. 
 

For the first time Sasikala's assets were state-owned
Author
Thiruvarur, First Published Feb 10, 2021, 3:51 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

For the first time Sasikala's assets were state-owned

தண்டனை முடிந்து, சசிகலா சென்னை திரும்பிய நிலையில், இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள், அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 6 சொத்துக்கள், காஞ்சிபுரத்தில் 17 சொத்துக்கள், செங்கல்பட்டில் 6 சொத்துக்கள், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் ஏற்கனவே அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 

For the first time Sasikala's assets were state-owned

இந்நிலையில், சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூரில் சொந்தமாக இருந்த அரிசி ஆலை, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட், குடியிருப்புகளை அரசுடைமையாக்கி அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதுவரை இளவரசி, சுதாகரன் சொத்துகள் மட்டும் அரசுடைமையாக்கப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக சசிகலாவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios