வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால். சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் மழை நீர் புகுந்தது. போர்ட்டிகோ தொடர்ந்து வீட்டைச் சுற்றி மழை நீரால் கருணாநிதி வீடு சூழந்துள்ளது.