Fishermen who thanks to edappaadi palanichamy

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர். 

புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை அம்மாநில அரசின் உதவியோடு தமிழக அரசின் கப்பல் படையும் கடலோர காவல் படையும் களமிறக்கியது. 

இதனிடையே ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் அல்லாத குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும் மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் மீன்வர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சம் வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

இதைதொடர்ந்து காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் வீடு இழந்தவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய உத்தரவிட்டதற்கு முதலமைச்சரை சந்தி்த்து நன்றி தெரிவித்துள்ளனர்.