first Kamal Hassan should be councilor Then let him to become Chief Ministe

இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் முதல்வராவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். முதலில் கமலை கவுன்சிலர் ஆக சொல்லுங்கள்; முதல்வராவதைப் பற்றி பிறகு பார்க்கலாம் என கமலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலாய்த்துள்ளார்.

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ளது. அரசியலில் தனிக்கட்சி தொடங்கி தனியாக தேர்தலை சந்திப்பேன் என உறுதியாக தெரிவித்துள்ளார் கமல். இதையெல்லாம் விட உச்சக்கட்டமாக ஒரு கருத்தை தெரிவித்தார் கமல். இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் முதல்வராகி விடுவேன் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே கமலின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்துவரும் அமைச்சர்கள், தேர்தல் வந்தால் முதல்வராகிவிடுவேன் என்ற கமலின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கமலை கலாய்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். முதலில் கமல் கவுன்சிலராக ஆகட்டும். பிறகு முதல்வர் பதவியை பற்றி யோசிக்கட்டும் என கலாய்க்கும் விதமாக அமைச்சர் பேசியுள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என தெரிவித்துள்ளார்.