தேனி மாவட்ட சின்னமனுரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில்  துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார்  பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், நாம் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையாக புதிய இந்தியாவையும், புதிய பாரத்தையும் உருவாக்க பட வேண்டும் என்று கூறினார். 


இது ஒரு பாதுகாப்பான பாரதம். உலக நாடுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடக உருவாக வேண்டும் என்பதற்காக, நமக்குள்ள இருக்கின்ற ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். 

அதை தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத், நாம் முதலில் இந்து அப்புறம் தான் மற்ற எல்லாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார் . அவர் பேசும்போது பாஜகவினரைப் போல கழுத்தில் காவித்து துண்டு அணிந்துகொண்டு பேசினார்.. 
  
ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஏற்கனவே பாஜகவில் இணையாத குறையாக அக்கட்சியின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வருகிறார். இவர் என்ன பாஜகவில் இணைந்துவிட்டாரா?'' என்றும், ‘’ஜெயலலிதா இருந்தால் இதுபோன்று காவி துண்டை ரவீந்திரநாத் கழுத்தில் போட்டுக் கொள்வாரா?' என்றும் பொது மக்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர்..

தனது மகனை எப்படியும் மத்திய அமைச்சர் அல்லது இணை அமைச்சர் ஆகிவிட வேண்டும் என காய் நகர்த்தினார் ஓ.பிஎஸ். ஆகையால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜகவை, குறிப்பாக பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகிறார் ரவீந்திரநாத். எப்படியும் அமைச்சர் பதவியை பெற்று விடவேண்டும் என்பதற்காகத்தான் பாஜக புகழ் பாடி வருகிறார் என்றும் அதிமுகவினரே கூறி வருகின்றனர்..

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நான் இந்து அப்புறம் தான் எல்லாம் என்று ஓபிஎஸ் மகன் பேசியது மீண்டும் அரசியலில் பரபரப்பாகி உள்ளது.