Asianet News TamilAsianet News Tamil

உடல்சிதறி பறிபோன 5 உயிர்கள்.. அதிமுக அரசின் அலட்சியமே காரணம்.. வேதனையில் கொதிக்கும் மு.க.ஸ்டாலின்..!

பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில்  பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Fireworks plant explosion accident 5 people dead...mk stalin slams aiadmk government
Author
Virudhunagar, First Published Oct 23, 2020, 5:21 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்ததற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Fireworks plant explosion accident 5 people dead...mk stalin slams aiadmk government

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.  உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Fireworks plant explosion accident 5 people dead...mk stalin slams aiadmk government

பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில்  பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios