மார்ச் 20ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு !!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, அடுத்த மாதம் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு.

financial report of the Tamil Nadu government will be submitted on March 20 said appavu

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர்,  தமிழக சட்டப்பேரவையில் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

financial report of the Tamil Nadu government will be submitted on March 20 said appavu

தொடர்ந்து அன்று பிற்பகல் சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி, நிதிநிலை அறிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் ஏற்கனவே பேசி தீர்வு காணப்பட்டது என்றும் அதில் எவ்வித குழப்பமும் இல்லை என்று கூறினார்.

இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை

சட்டப்பேரவையை பொறுத்தவரை எந்த இருக்கையில் யார் உட்கார வேண்டும் என்பது தனது முழு அதிகாரத்திற்கு உட்பட்டது. தொடர்ந்து நிதி அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கை மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

financial report of the Tamil Nadu government will be submitted on March 20 said appavu

வேளாண் நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் உள்ளிட்டவை அலுவலக கூட்டத்திலே முடிவு செய்யப்படும் என்றும்,  ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவை மாடத்தில் இருந்து தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த விவகாரம் உரிமை மீறல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios