காங்கிரஸ் என்றாலே பல கோஷ்டிகளைக் கொண்ட கட்சி என்பதை அனைவரும் அறிவர்.கட்சிக்குள்ளே பல கோஷ்டிகள் இருப்பதால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு

தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பில் போது தலைவர்கள் அமரும் மேடையில் காங்கிரஸ் கமிட்டியின் தொழிலாளர் பிரிவு நிர்வாகி முனுசாமி அமர்ந்ததற்கு முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படி வசைபாடினார் இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது

Scroll to load tweet…

மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி முன்பே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாக செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி திக்குமுக்காடிய நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.