Asianet News TamilAsianet News Tamil

"பொண்டாட்டிக்கு சீட்டு வேணும்னா கேட்டு வாங்கு..” திமுக மேடையில் உட்கட்சி உள்குத்து.. பரபரப்பு வீடியோ...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி சொல்லும் படியாகத்தான் இருக்கிறது இன்றைய அரசியல் நிலவரம். முன்பெல்லாம் ஆளும் கட்சியை எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுவார்கள். எதிர்கட்சியை ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் தற்போது உட்கட்சிக்குள்ளே குற்றம் சுமத்தும் போக்கு தலை தொடங்கி விட்டது.

Fight in Dmk stage
Author
Chennai, First Published Feb 27, 2022, 11:05 AM IST

நேற்று காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் காங்கிரஸ் தலைவர் முன்பே நடந்தது. இன்று ஆளும் கட்சியான திமுகவில் நடந்துள்ளது. அதுவும் மேடையில் வைத்தே பங்கமாய் கலாய்த்து தள்ளியுள்ளார் மீனா..

Fight in Dmk stage

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும் பிரச்சனை, நடைபெறாமல் இருந்தாலும்  பிரச்சனைதான்...
எனக்கு சீட் கொடுக்கவில்லை உனக்கு சீட்டு கொடுக்கல அப்படின்னு  அனைத்து கட்சியிலும்  மோதல் போக்கு தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனக்கு ஒரு கண்ணு போச்சா உனக்கு இரண்டு கண்ணும் போகனும்னு நினைப்பு தான் அதிகமாக இருக்கு..இந்த பிரச்சனை சின்ன கட்சியில் மட்டுமில்ல ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிலும் தான் உள்ளது. இப்படி பட்ட நிலையில் தான் கோவை திமுகவில் ஏற்கனவே கோஷ்டி பூசல் இருந்த நிலையில் தற்போது புது பிரச்சனை வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கு,கோவை மாநகராட்சி தேர்தல்ல  திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்  மீனாவுக்கு சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான்  கோயம்புத்தூரில் எப்போதும்  தேர்தலில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த திமுவுக்கு இந்த முறை  மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த  வெற்றியையொட்டி கோயம்புத்தூர் காளப்பட்டியில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

Fight in Dmk stage

அப்போது மேடையில் பேசிய  திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனக்கு கவுன்சிலர்  தன்னை பற்றி பொய்யான தகவலையும், தவறான தகவலையும் தலைமைக்கு கொடுத்ததாலதான் சீட் கிடைக்காமல் போனாதக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கை குற்றம்சாட்டி பேசினார். உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கனும் என்றால் கேட்டுட்டுபோ  அதற்கான என்னோட வளர்ச்சியை கெடுக்காதே என ஆவேசமாக பேசினார்.  இந்த பேச்சை கேட்டு மிரண்டு போன கார்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். 
அப்போது மேடைக்கு கீழே இருந்த ஒரு தரப்பினர் மீனா  ஜெயக்குமாரின் பேச்சுக்கு ஆதரவளித்து கை தட்டி வரவேற்றார்கள். ஆனால்  மற்றொரு தரப்போ மீனாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினார்கள்.
இதன் காரணமாக அந்த கூட்டத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது மீனாவின் பேச்சை உடனே நிறுத்துனு  ஒரு தரப்பினர் கத்தியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது  மேடையில் அமர்ந்திருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன செய்வது என்று புரியாமல் இருந்த  நிலையில் திடீரென மைக்கை எடுத்த செந்தில்பாலாஜி ஏதாவது புகாராக இருந்தல்  கடிதமாக தருமாறு கேட்டுக்கொண்டார். புகாரை தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என  சமரசம் செய்தார். ஆனால் இதனையும் மீறி  தொடர்ந்து மீனா ஜெயக்குமார் பேச முயன்றார். அப்போது  கட்சி நிர்வாகிகள் மீனாவை பேச விடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திர எழுந்து சென்று மீனா ஜெயக்குமாரிடம்  பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து பாதியிலேயே தனது பேச்சை மீனா முடித்துக்கொண்டார்.

 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் ஏற்கனவே பல கோஷ்டி  பூசல் உள்ளது.  இதன் காரணமாகத்தான் கோயம்புத்தூரை பொருத்தவரைக்கும் திமுக ஜெயிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த கோஷ்டியை தடுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.  இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த கலவரம் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக தலைமை விளக்கம் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios