Asianet News TamilAsianet News Tamil

பாஜக கட்சியில் இணைந்த திராவிட கட்சி பின்புலத்தை சேர்ந்த பெண் பிரபலம்..!

திராவிட கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவரின் மகளும், மனித உரிமை செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான லூர்து செல்வம் பாஜகவில் சேர்ந்துள்ளார். 
 

Female celebrity from Dravida party background who joined BJP
Author
Tamil Nadu, First Published Aug 14, 2020, 9:53 AM IST

திராவிட கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவரின் மகளும், மனித உரிமை செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான லூர்து செல்வம் பாஜகவில் சேர்ந்துள்ளார். 

தமிழக பாஜகவில் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், வானதி சீனிவாசன், ஜெயலட்சுமி உள்ளிட்ட பல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளராக களப்பணியாற்றி வரும் லூர்து செல்வம், அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ’’ திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவள் நான். எனது தந்தை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். திராவிட கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். தற்போது நான் பாஜகவில் களப்பணியாற்றி வருகிறேன். நாட்டிற்காக தன்னலமற்று உழைக்கும் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்திருக்கிறேன்.Female celebrity from Dravida party background who joined BJP

21ஆம் நூற்றாண்டின் சாணக்கியராக அமித்ஷா திகழ்கிறார். பல கட்சிகள் இருந்தாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக இருக்கிறது பாஜக. மதிப்பிற்குரிய அமைச்சர்கள், நிர்மலா சீத்தாராமன், ஸ்மிருதி இராணி போன்றவர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமே இதற்கு உதாரணம்.Female celebrity from Dravida party background who joined BJP

இண்டர்நேஷனல் ஹிந்து சேனா அமைப்பின் மகளிர் பிரிவான சர்வதேச துர்கா சேனா கவுன்சில் மாநில துணை அமைப்பாளராகவும் தேசத்திற்காக பணியாற்றி வருகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios