பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?
மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாத சொல் அல்ல மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டுதான் மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது எனவே கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை என முரசொலியில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலந்தி என்ற பெயரில் " கொக்கு என்று நினைத்தாயோ" கொங்கணவா என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்பட தேவையில்லை என முரசொலி கட்டுரை எழுதி இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆளுநர் முதல்வர் மோதல்:
திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜகவுக்கும் -திமுகவுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மாநில உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் சமரசமின்று திமுக எதிர்ப்பதே அதற்கு காரணமாக உள்ளது. சித்தாந்த ரீதியாக பாஜகவும்-திமுகவும் நேர் எதிர் நிலையில் இருப்பதே இதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. இதற்கிடையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவியேற்றது முதலிருந்தேன் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் இருந்துவருகிறது. அதிலும் நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுனர் திருப்பி அனுப்பியது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:இதுதான் ஒரே நாடு லட்சணமா.? தெற்கு ரயில்வேக்கு 59 கோடி, வடக்கு ரயில்வேக்கு 13 ஆயிரம் கோடியா.? டாராக்கிய கனிமொழி
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா:
நீட் விலக்கு கோரி தமிழக அரசின் சார்பில் மசோதா அனுப்பி வைத்தும், அதன்மீது ஆளுநர் பாராமுகமாக இருந்த நிலையில், கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற பழமொழியை மேற்கோள்காட்டி திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வரையப்பட்டது. அதாவது சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஒருமுறை ஆழ்ந்த தவத்தில் இருக்கையில், மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு அவர்மீது எச்சமிட்டது. அதனால் கொங்கணவரிம் தவம் கலைந்தது. தவம் கலைந்த கோபத்தில் கொங்கணவர் அந்தக் கொக்கை பார்த்தார், அவரின் கோபத் தீயில் கொக்கு பொசுங்கி சாம்பலானது. அதை மமதையுடன் அவர் பார்த்தார். அதே ஆணவத்துடன் அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு வீட்டு வாசலில் நின்று ஒரு பெண்ணிடம் யாசகம் கேட்டார்.
ஆனால் அந்தப் பெண் அவரது கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்ததால் தாமதமாக வந்து பிச்சையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொங்கணவர் உனக்கு அவ்வளவு அலட்சியமா என அந்தப் பெண்ணை எரிப்பது போல பார்த்தார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை, அப்போது அந்த பெண் " கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" என அவரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதில் அவமானப்பட்ட கொங்கணவர் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து சென்றார்.

இந்த கதையை மேற்கோள்காட்டி ஆளுநரை கொங்கணவா என முரசொலி விமர்சித்தது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கட்டுரை வெளியான நிலையில் தான் நீட் தீர்மானத்தை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்நிலையில் மீண்டும் தமிழக ஆளுநருக்கு அறிவுரை கூறும் வகையில் முரசொலி கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,
பயப்படாதீங்க ஆளுநரே- முரசொலி அட்வைஸ்:
1500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை, அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே என்று வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் எழுதுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, "india that is bharath, shall be a union of states" என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்:பொறுத்து பொறுத்த பார்த்து ஆளுநர் மாளிகைக்கு புயலாய் புறப்பட்ட ஸ்டாலின்.. அனுப்பி வைப்பதாக உறுதி அளித்த RN ரவி.

பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்? மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் உருவாக்க முடியும். மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டு தான் மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை என திமுக நாளேடான முரசொலி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
