டெல்லியை பாஜக தான் கைப்பற்றும் என்று உறுதியாக மீனாட்சிலோகி பேசியிருப்பது ஆம்ஆத்மி கட்சியினரை அச்சத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.


டெல்லி சட்டமன்றத் தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில்  நேற்று பாஜக ஆம்ஆத்மிக்கு இடையில் தர்பார் போராட்டமாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. தேர்தல் முடிவின் இறுதியில் டெல்லி சட்டசபைக்கு மொத்தமுள்ள 70 இடங்களில் யார் யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்கிற கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஆம்ஆத்மி  56 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துகணிப்பில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 44 தொகுதிகளையும் பாஜக 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் ஆம்ஆத்மி 53 முதல் 57 இடங்களையும் பாஜக 11 இடங்களையும் காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியாகியது.


இந்த கருத்துக்கணிப்புக்கு பிறகு பாஜக கதிகலங்கி போனது .எப்படியாவது டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அரவிந்த்கெஸ்ரிவாலை பயங்கரவாதி என்றும் டெல்லிக்கு எதையும் செய்யாதவர் என்றும் பேசி பிரச்சாரக்களத்தை சூடேற்றினார் அமித்~h. ராகுல்காந்திக்கும் அமித்~h மோடி போன்றவர்களுக்கும் இடையே பயங்கர தர்பார் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவடைந்திருக்கிறது. ஆனால் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தாங்கிக்கொள்ள முடியாது பாஜக  கட்சியின் மூத்த தலைவர்கள் நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக்கூட்டத்தை அமித்~h மீனாட்சி லோகி ஆகியோர் ஆலொசனை நடத்தினர்.
அதன் பிறகு பேசிய மீனாட்சிலோகி..” கருத்துக்கணிப்பு சரியானது அல்ல:இந்த புள்ளி விபரம் மாலை 5மணி வரைக்கும் எடுக்கப்பட்டது .மாலை 6மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. நிச்சயமாக டெல்லி பாஜக ஆட்சி கைப்பற்றும் என்று சொல்லியிருப்பது ஆம்ஆத்மி அச்சமடைய வைத்திருக்கிறது. 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும் . பாஜக உறுதியாக நாங்கள் தான் டெல்லியை கைப்பற்றும் என்று சொல்லியிருப்பது பல்வேறு வகையிலான சந்தேகத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

TBalamurukan