தனது மகன் விஜய் பெயரில் கட்சி தொடங்கி பிறகு அதை கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது தனது பெயரிலேயே கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சி தனது பெயரிலேயே அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்கழி முடிந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.ஏ.சி வெளியிடுவார் என பேசிக் கொள்ளப்படுகிறது.