அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர்.இந்த விளையாட்டின் ஜாம்பவான் என்றழைக்கப்பட்ட மரடோனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கோவாவின் அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் மிக்கேல் லோபோ கூறுகையில், கோவா இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக கோவா அரசு அல்ல, நான் டியாகோ மரடோனாவின் முழு உருவ சிலையை வடக்கு மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் நிறுவுவேன் என்று தெரிவித்தார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர். அர்ஜெண்டினா அணி 1960- ஆம் ஆண்டு கால்பந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழந்தவர் மாரடோனா.அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளராக இருந்த, இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 கேப்புகளைப் பெற்றுள்ளார் மற்றும் 34 கோல்களை அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றி பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார், மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்று அதிகம் பேசப்பட்டவர் மரடோனா. இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.எபெட்ரின் பயன்படுத்திய காரணத்திற்காக அமெரிக்க ஒன்றியத்தில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலிந்து வெளியேற்றப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.

1997 ஆம் ஆண்டில் தனது 37 வது பிறந்தநாள் முதல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கொக்கைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார் மேலாண்மையில் அவருக்கிருந்த முன்னனுபவம் குறைவு எனினும், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.