கடன் தொல்லை காரணமாக தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி, மகனுடனும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் பேராசிரியர் ஒருவர் மனைவி, மகனுடனும் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடப்பு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. இவை தடுக்கப்பட வேண்டும்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என அன்பமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தவர் சிவாஜி (43) டெய்லர். இவரது மனைவி வனிதா (33). பி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் பைப் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவர்களது ஒரே மகன் வெற்றிவேல் (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். சிவாஜிக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார். இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஆகையால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தறடகொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொள்வது மூன்றாவது நிகழ்வாகும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. டிசம்பர் மாதத்தில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொள்வது மூன்றாவது நிகழ்வு ஆகும்.

முன்னதாக, கடன் தொல்லை காரணமாக தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி, மகனுடனும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் பேராசிரியர் ஒருவர் மனைவி, மகனுடனும் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடப்பு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. இவை தடுக்கப்பட வேண்டும்.

தீர்க்க முடியாத கடன் தொல்லையால் மன உளைச்சலும், அவமானமும் ஏற்படும்போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவது இயல்பானதுதான். ஏற்கெனவே தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.
கந்து வட்டி உள்ளிட்ட தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கலைக் கேட்டு தீர்வு வழங்க, ஒரு நிலையான சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மனநலக் கலந்தாய்வு வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
