காவியை புகுத்தும்வகையில் தமிழக அரசு பேரூந்துகளில் போலி திருக்குறள்கள் எழுதப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இதுகுறித்து, சு.பொ.அகத்தியலிங்கம் என்பவர், ‘’நான் கடந்த 11ம் தேதி காலை பள்ளி கொண்டாவில் இருந்து ஓசூருக்கு TN 23 N 2463 பதிவெண் கொண்ட அரசு பஸ்ஸில் பயணித்தேன். பஸ்ஸில் என்ன திருக்குறள் உள்ளது என்பதை உற்றுக் கவனித்தேன். திருக்குறள் இடம் பெறும் இடத்தில் குறல் போல் தோற்றம் அளித்த வரிகள் அதிர்ச்சி அளித்தது.

 

‘’எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்’இந்தத் திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லையே..! இதை எழுதியது யார்? இடம்பெறச் செய்தது யார்? பக்கத்தில் இருக்கையில் இருந்த இளைஞர் சொன்னார். ‘’நிறைய பஸ்களில் இப்படிப்பட்ட குறள் போன்ற போலிக்குறள் மூல  வள்ளுவரை கொச்சைப்படுத்துகிறார்கள். இதென்ன அரசு பஸ்ஸா? ஹெச்.ராஜா பஸ்ஸா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே திருவள்ளுவருக்கு பாஜக காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 

அதற்குள் அரசு பேருந்துகளில் மதச்சாயம் பூசும் வகையில் போலி திருக்குறள்களை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.