Asianet News TamilAsianet News Tamil

அடம்பிடித்து அசால்ட் காட்டிய மோடி... கண்கள் பனித்து, இதயம் இனித்த ஷி ஜின்பிங்..!

மாமல்லபுரத்தின் வரலாற்றையும், சீனாவுடன் இருந்த தொடர்பையும் அறிந்து அநாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கில் கண்கள் பனித்து இதயம் இனித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Eyes frozen, heart sweet xi Jinping
Author
Tamil Nadu, First Published Oct 12, 2019, 1:21 PM IST

பிரதமர் நரேந்திர மோடி சற்று வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை தலைநகரில் தான் வைப்பார்கள். இதனால் டெல்லியை பற்றி மட்டுமே வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியும். இதை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி.

இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் சுற்றுலாத்தலங்களிலும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், அயல் நாட்டு தலைவர்களை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Eyes frozen, heart sweet xi Jinping

இந்நிலையில் பிரதமர்  மோடி – சீன அதிபர் சந்திப்பு, தமிழகத்தில் நடப்பதை உலக நாடுகளின் பார்வை தமிழகத்தின் மீது பதிந்துள்ளது. எதற்காக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது யார் தேர்வு செய்தார்கள் என பலரும் கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் இதற்கு காரணம் பிரதம மோடி தான் என தெரிய வந்துள்ளது. வளரும் இருபெரும் நாடுகளின் சந்திப்பு என்பதாலும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி நாடுகளின் சந்திப்பு சில வாரங்களுக்கு முன் மோடி அமெரிக்காவில் டிரம்புடன் சந்திப்பு இன்று அமெரிக்காவின் எதிரி நாடக கருதப்படும் சீன அதிபரை இந்தியா வழைத்து சந்திப்பு என உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது கண் கொத்தி பாம்பாக உற்று நோக்குகின்றன, என்பது நிதர்சனம்.Eyes frozen, heart sweet xi Jinping

இதில் முக்கியமானது உலக நாடுகளை இந்தியா மீது மட்டுமல்லால் தமிழகம் மீது பதிந்துள்ளது. ஏனென்றால் சீனாவிற்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்பதை உலகம் தற்போது ஆராய்ந்தது வருகிறது. இந்தியாவில் எத்தனையோ நகரங்கள், பாரம்பரிய பெருமைமிக்க இடங்கள் என பல இருந்தும், தமிழகத்தின் வாங்க கடல் சந்திப்பின் மாமல்லபுரம், ஏன் இந்த சந்திப்புக்கு தேர்வு செய்யப்பட்டது, என்பதற்கு வரலாறு தான் காரணம் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.Eyes frozen, heart sweet xi Jinping

பிரதமர் மோடி, சீன இந்திய தொடர்புகளை பற்றி ஆராயும் போது மாமல்லபுரத்தின் பெருமையை பற்றி அறிந்துள்ளார் அவரது சொந்த தொகுதியான வாரணாசி அல்லது அவரது சொந்த மாநிலம் குஜராத் மற்றும் சில நகரங்களில் இந்த சந்திப்பை வைத்து கொள்ளலாம் என அதிகாரிகள் அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி மாமல்லபுரத்தையே  தேர்வு செய்தார். சீனாவுக்கும், தமிழகத்திற்கு 2000 ஆயிரம் ஆண்டுகளாக உள்ள தொடர்பை அறிந்து கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங் நெகிழ்ந்து போயிருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடந்திருந்தாலும் இப்படியொரு நெகிழ்ச்சி ஜின்பிங்குற்கு கிடைக்கவே கிடைத்திருக்காது. 

Follow Us:
Download App:
  • android
  • ios