ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அசாம் முதல்வர் சர்பானாந்த சோனாவால் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளோம். ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்று செயல்படு