Explanation of the cancellation of the RKnagar election
சென்னை ஆர் கே நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜெயலலிதா இறந்து ஜூன் 4-ம் தேதியுடன் 6 மதம் முடிவடைந்தது. காலியாக உள்ள தொகுதியில் இடைத்தேர்தலை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் விதிப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து விளக்கம் அளித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆர் கே நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 தேதி மறைந்தார். அவர் மறைவிற்கு பிறகு ஆர்.கே நகர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடந்து வந்தது.

இதனையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா தரப்பில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷ் உட்பட 62 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் விண்ணப்பித்திருந்தினர். ஆனால் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறபித்தது.
இதனையடுத்து தினகரன் தொப்பி சின்னதிலும், மதுசூதனன் இரட்டை மின்கம்ப சின்னதிலும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆர்.கே. நகர் தொகுதியில் லட்சகணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தினகரன் பொது மக்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நிறுத்திவைக்கபட்டது.

இதையடுத்து தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் கேட்டு மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் விதிப்படி தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் சுந்தந்திரமாக நியாயமாக தேர்தல் நடக்கும் சூழல் வந்தால்தான் ஆர்.கே.நகர் நடத்தப்படும் என்று விளக்கமளித்திருந்தது.
தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தேர்தலை ஒத்திவைக்க அனுமதியளித்துள்ளது.
