Asianet News TamilAsianet News Tamil

திமுகவினருக்கு அனுபவமோ... இல்லையோ..? வர்தா, கஜா புயல்களை கடந்து நிவரையும் ’நெவராக்க’அதிமுக அரசு போட்ட திட்டம்

கடும்புயல்களையே சமாளித்தவர்கள் இந்த கடுமழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிக்க பல திட்டங்களை வகுத்துள்ளனர். நிவர் புயலையும் எதிர்க்கொள்ள செம்ம ஆக்டிவாக வலம் வருகிறது அதிமுக அரசு. 
 

Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms
Author
Tamil Nadu, First Published Nov 24, 2020, 1:40 PM IST

நவம்பர், அல்லது டிசம்பர் மாதங்களில் பருவமனை தீவிரமடைந்து சென்னை மக்களையும் கடலோர பகுதிகளையும் கதிகலங்க வைக்கும் என்பது திமுகவினருக்கு அனுபவமோ... இல்லையோ..? அதிமுகவினருக்கு வர்தா, கஜா என சில புயல்கள் பாடம் கற்பித்து விட்டுப்போனது. அதே போல அந்த புயல்களை ஓ.பி.எஸும், ஈ.பி.எஸும் தத்தம் அவரவர் ஆட்சிகாலத்தில் திறம்பட மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடும்புயல்களையே சமாளித்தவர்கள் இந்த கடுமழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிக்க பல திட்டங்களை வகுத்துள்ளனர். நிவர் புயலையும் எதிர்க்கொள்ள செம்ம ஆக்டிவாக வலம் வருகிறது அதிமுக அரசு. Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms

இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை 28-10-2020 அன்று தொடங்கியது. அன்று முதல் 16-11-2020 வரையிலான இயல்பான மழையளவு 287.9 மி.மீ. ஆனால், இதுவரை 180.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையைவிட 37% குறைவு. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவும், 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான ஏரிகளில் நீரின் அளவு உயர்ந்து வந்தன. இந்நிலையில் நிவர்புயல் மிரட்டிவருகிறது. 

அதற்கு முன்பாகவே, ஆங்காங்கே அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்டம் மற்றும் நீர்த்தேக்க அளவை பார்வையிட்டு கணித்து வைத்து விட்டனர். இதனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்தப்புயலை எதிர்கொள்ள கடந்த கால நிகழ்வுகள் / தரவுகள் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms

மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடத்கக்கது. இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கென 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இது மட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறிந்து தயார் நிலையில் உள்ளனர்.மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக  திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது

.Experience for DMK or not ..? The AIADMK government's plan to 'Nevarakka' to overcome the Wardha and Gajah storms

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios