கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி துவங்கிய, நாடாளு மன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக 542 தொகுதிகளில் நடைபெற்று இன்றுடன் முடிந்துள்ளது. 

இம்மாதம், 23 ஆம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக அதிக இடங்களை யார் பெறுவார் மீண்டும் பிரதமராக மோடியே பதவியெடுப்பாரா அல்லது ராகுல் பிரதமராக பதவி ஏற்பாரா என 'Exit poll ' நடத்திய கருத்து கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், வெற்றி பெற வேண்டும் என , பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வழிபாடு நடத்தினார்.

மேலும், தொடர்ந்து 20 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். இவரின் வேண்டுதலை பலித்தது போல் தற்போது வெளியாகியுள்ள 'Exit poll' கருத்து கணிப்பு, மோடிக்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. இதை கண்டு ஒரு பக்கம் பாஜக கட்சியினர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சினர் உறைந்து போய் உள்ளனர்.