மத்தியில் மீண்டும் அமோக மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக, பா.ஜ.க கூட்டணி பரிதாப தோல்வி அடையும் என்று அதே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கணிப்புகள் அனைத்திலுமே பா.ஜ.க 280 முதல் 310 வரை பெற்று அமோக முன்னணியில் உள்ளது .ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அ.திமு.க கூட்டணி ஒற்றை இலக்கமான 5 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

என் டி டி.வி வெளியிட்டுள்ள மற்றொரு கருத்துக்கணிப்பில் அதிமுக பா.ஜ.க கூட்டணி 12 இடங்களையும் திமுக காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.