Asianet News TamilAsianet News Tamil

ஜெ., மரணம்! அ.தி.மு.க.வில் பிளவு! இரண்டையும் பயன்படுத்தி ரூ.6 கோடியை ஆட்டய போட்ட சின்னசாமி!

அண்ணா தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் சின்னசாமி ரூபாய் 6 கோடியை கையாடல் செய்தது எப்படி என்கிற தகவல் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து சின்னசாமியை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அதிரடியாக நீக்கினர்.

Ex-MLA Chinnasamy expelled from AIADMK
Author
Chennai, First Published Aug 14, 2018, 10:32 AM IST

அண்ணா தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் சின்னசாமி ரூபாய் 6 கோடியை கையாடல் செய்தது எப்படி என்கிற தகவல் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து சின்னசாமியை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அதிரடியாக நீக்கினர். இதற்கான காரணத்தை அ.தி.மு.க வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் சின்னசாமி நீக்கத்திற்கு காரணம் அவர் தினகரனுடன் தொடர்பில் இருப்பது தான் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சின்னசாமியும் தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.Ex-MLA Chinnasamy expelled from AIADMK

தற்போது அ.ம.மு.கவின் தொழிற்சங்க பிரிவுக்கு மாநிலச் செயலாளராக சின்னசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து சென்ற மத்தியகுற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சின்னசாமியை கைது செய்தது. மேலும் அண்ணா தொழிற்சங்க நிதி ரூ.6 கோடியை சின்னசாமி கையாடல் செய்ததால் தான் கைது நடவடிக்கை என்றும் விளக்கம் கொடுத்தது. இந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த அ.தி.மு.கநிர்வாகிகளும் அரண்டு போயினர். ஏனென்றல் அ.தி.மு.கவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கட்சிப் பணத்திலும் சரி, சங்கப்பணத்திலும் சரி கையாடல் என்கிற செய்தி இதுவரை தகவலாக கூட வெளியானது இல்லை. அப்படி இருக்கையில் ரூ.6 கோடியை சின்னசாமி கையாடல் செய்ததாக போலீசார் கூறியது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.Ex-MLA Chinnasamy expelled from AIADMK

விசாரணையின் போது தான் சின்னசாமி என்னவெல்லாம் செய்தார் என்கிற தகவல் வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே பணத்தை கையாடல் செய்வதை சின்னசாமி துவங்கிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து மீண்டு வரமாட்டார் என்கிற தகவல் வெளியான போது கையாடல் செய்வதை சின்னசாமி தீவிரப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதா படுத்த படுக்கையாக இருந்த நிலையில் கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொழிற்சங்க நிகழ்ச்சிகள் என்று கூறி சங்கப்பணத்தை எடுத்து செலவு செய்தது போல் கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளார் சின்னசாமி. மேலும் சங்கத்திற்கு பொருட்கள் வாங்கியது, சங்கத்தின் தினசரி செலவு என்று சின்னசாமி சார்பில் எழுதிவைக்கப்பட்ட கணக்குகள் அனைத்துமே அபத்தும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு லட்சக்கணக்கில் தொழிற்சங்க பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திற்குமே சின்னசாமி தரப்பு பொய் கணக்கு எழுதியுள்ளது. ஒரு கட்டத்தில் கையாடல் செய்த பணம் கோடிகளை தாண்டவே, சின்னசாமிக்கு நெருக்கமான சிலரே ஓ.பி.எஸ் காதிற்கு சங்கதியை கொண்டு சென்றுள்ளனர். அவர் சின்னசாமியை அழைத்து மேம்போக்காக அது குறித்து விசாரித்ததாக சொல்லப்படுகிறது. Ex-MLA Chinnasamy expelled from AIADMK

ஆனால் சின்னசாமி அதற்கு அளித்த பதிலில் ஓ.பி.எஸ்.சுக்கு திருப்தி இல்லை.  இதனை தொடர்ந்து சின்னசாமியை ரகசியமாக கண்காணித்த போது அவர் கையாடல் செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து சங்கத்தின் மற்ற நிர்வாகிகளை கொண்டு கணக்கு வழக்கு பார்த்த போது தான் ஒரே வருடத்தில் சுமார் ஆறு கோடி செலவு கணக்கு எழுதியிருப்பதும் தெரியவந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க சார்பில் எந்த நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அப்படி இருக்க சின்னசாமி எந்த அடிப்படையில் இவ்வளவு தொகையை செலவு செய்திருக்க முடியும் என்கிற கேள்வி எழுந்தது.Ex-MLA Chinnasamy expelled from AIADMK

மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்று கூறியே சின்னசாமி அதிக அளவில் பணத்தை தொழிற்சங்க கணக்கில் இருந்து எடுத்துள்ளார். ஆனால் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் முழுக்க முழுக்க தமிழக அரசால் நடைபெற்றது. இதனை எல்லாம் மனதில் கொண்டே சின்னசாமி மீது தொழிற்சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஜக்கையன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சின்னசாமியோ தான் செலவு செய்த தொகைக்கு முழுவதும் கணக்கு உள்ளதாகவும், தன்னை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பழிவாங்குவதாகவும் புலம்பி வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios