ex ministers come to dinakaran house in adaiyar
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டற்கு முன்னாள் அமைச்சர்கள் வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவில் அடுத்தடுத்து குழப்பம் நிலவி வந்ததால் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு டிடிவி தினகரனும் ஒத்துகொள்வதாக அறிவித்தார். ஆனால் ஏதோ ஒரு பயத்தின் காரணமாகவே அமைச்சர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என கருத்து தெரிவித்தார்.
எடப்பாடி அமைச்சரவையின் இத்தகைய செயலுக்கு ஒ.பி.எஸ் தரப்பு வரவேற்பு அளித்தது.
ஆனால் எடப்பாடி தரப்பு ஒ.பி.எஸ் நிர்பந்தத்தால் இந்த முடிவு எடுக்கவில்லை எனவும், ஒ.பி.எஸ் அணியுடன் இணைந்தாலும் எடப்படியே முதலமைச்சர் எனவும் கூறி வந்தனர்.
இதனால் ஒ.பி.எஸ் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.
ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டன்ர். இதனிடையே பல்வேறு தரப்பினரும் தினகரன் பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதால் அவரை வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்காக சசிகலா நடத்தும் திட்டமே இது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதை கேள்வி பட்ட ஒ.பி.எஸ் தரப்பினர் இன்னும் உச்சாணி கொம்பில் ஏறி உட்காந்து கொண்டனர்.
சசிகலாவையும் தினகரனையும் முறைப்படி அறிவிப்பின் மூலம் கட்சின் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அறிவிக்க வேண்டும் எனவும் ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைகளை ஏற்றுகொண்டால் பேச்சுவார்த்தைக்கு வருவோம் இல்லையென்றால் மக்களை சந்தித்து பார்த்து கொள்கிறோம் என கூறிவிட்டனர் ஒ.பி.எஸ் தரப்பினர்.
இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டற்கு முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், மாதவரம் மூர்த்தி ஆகியோர் வந்துள்ளனர்.
இதனால் அடுத்த கட்ட நிகழ்வு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு தமிழக மக்களிடையே வலம் வருகிறது.
