Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் நியாயமா இருக்கா சாரே..? இந்நாள் அமைச்சரை வசமாக கலாய்க்கும் முன்னாள் அமைச்சர்..!

ஈரோட்டில் ஒரு அறிவிப்பு; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு என்று இந்தக்குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சாரே? என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

Ex minister Thangam Tennarasu slam minister Sengottayan
Author
Chennai, First Published Sep 26, 2020, 8:39 PM IST

பள்ளிக் கல்வித்துறையில் அவ்வப்போது மாறுப்பட்ட அறிக்கைகள் வருவதும், அதை பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அக்டோபர் 1 ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன் லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.

Ex minister Thangam Tennarasu slam minister Sengottayan
“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு  இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு” சொல்றீங்க . அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’  போடறீங்க. அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி.ஓ போட்டுட்டு  நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

Ex minister Thangam Tennarasu slam minister Sengottayan
பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா? இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதல்வர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க? இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது?

Ex minister Thangam Tennarasu slam minister Sengottayan
ஈரோட்டில் ஒரு அறிவிப்பு; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு. ‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?” என்று தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios