வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி உள்ளது என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .  சமீபத்தில் நிர்வாகத்தில் தமிழகம் தலை சிறந்து விளங்குவதாக மத்திய அரசு தமிழக அரசை  பாராட்டு சான்று வழங்கி இருந்த நிலையில்   பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியிருப்பது  தமிழக அரசை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.  சென்னையில் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- 

 தமிழக சட்ட சபையில் பேசும்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் ஆனால் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக அந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என  அவர் தனது கருத்தை மாற்றியிருக்கலாம் .  இதற்கடுத்து என்ன நடக்கிறது என பார்ப்போம் ,  நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி துவங்கட்டும் ,  முதலில் அவரது கட்சிக் கொள்கை கோட்பாடுகளை அறிவிக்கட்டும் அதன்பின் அவருடன் யாரெல்லாம் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யலாம் நடிகர் கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்கைகள் என்ன என்பது குறித்து அறிவிக்கட்டும்.  

நடிகர் கமல் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் , அரசியல் என்பது திரைப்படம் தயாரிப்பது போல் அல்ல தமிழகத்தின் முக்கிய பிரச்சனை  இது,   கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளது இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க வரும்  2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் .  கமலஹாசன் இதை  புரிந்துகொள்ளவேண்டும் .  அதிமுகவுடன்  ராஜ்யசபா தேர்தலில் சீட் கேட்டு பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை முயற்சி எடுப்பதற்கான தேவை இருக்கிறதா என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை என்றார் .